shadow

50e7d2d0-9645-4b1b-8237-be8d64e53821_S_secvpf

வேறு எதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப்பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் இந்து மதம் அளித்துள்ளது. பசுவை, வெறுமனே மாடு என்று அழைக்காமல் பசுத்தாய், கோமாதா என்று மக்கள் பாசத்தோடு அழைப்பது காலம், காலமாக நடைமுறையில் உள்ளது. பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே மிருகம் பசு மட்டுமே.

பசுவின் உடலின் அனைத்து பாகத்திலும் அனைத்து தேவர்களும் வசிப்பதாக வேத ஆகமங்கள் கூறுகின்றன. கொம்புகளில் வீமனும், இந்திரனும், காதுகளில் அசுவினி குமாரர்களும், கழுத்து தாடைப் பகுதிகளில் ராகு- கேதுவும், இரண்டு கண்களில் சூரியன்-சந்திரனும், மூக்கின் மேல்பகுதியில் விநாயகரும்- முருகனும், முன்னிரண்டு கால்களில் பைரவரும் அனுமனும், கழுத்து முதலான பகுதிகளில் லட்சுமி, பரத்வாசர், குபேரர், வருணன், அக்னி, பிரம்மன், கங்காதேவி, நாரதர், வசிஷ்டர், ஜனக குமாரர்கள், பூமாதேவி, சரஸ்வதி, விஷ்ணு பராசரர், விஸ்வாமித்திரர், அமிர்தசாகரர் ஆகியோரும் வால்பகுதியில் நாகராஜனும், முன்குளம்பு பகுதியில் மந்திராசலம், துரோணசலம் ஆகிய பர்வதங்களும், மடியில் அமிர்தசுரபிக் கலசமும் இன்னும் பிற தேவர்களும் வசிப்பதாக ஐதீகம்.

பசுவிற்கு ஒரு பிடி புல் கொடுப்பதே தர்மம் என்றால் அந்த பசுவை வளர்த்துப் பேணி காப்பது எந்த அளவிற்கு புண்ணியத்தை கொடுக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். குழந்தை இல்லாதவர்கள் பசு வளர்த்து சேவை செய்தால் உடனடியாக குழந்தை பாக்கியம் உண்டாகும். தீராத நோய் நொடிகளுக்கு பசுஞ்சாணத் திருநீறு மருந்தாகும்.

குடும்பப் பீடை உள்ள இடங்களில் புண்ணிய அர்ச்சனை செய்து பசுமாட்டை உள்ளே வரவழைத்து பூஜை செய்தால் தோஷங்கள் விலகும். திருமணமாகாதவர்கள் பசுவை வெள்ளிக்கிழமை தோறும் மூன்று முறை வலம் வந்து வழிபாடு செய்தால் தோஷம் விலகித் திருமணமாகும். நோயாளிகள் ஒரே பசுமாட்டின் பாலை தண்ணீர் கலக்காமல் அருந்தினால் நோய் நீங்கும்.

Leave a Reply