இன்றைய தேதியில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எத்தனை? புள்ளி விபர தகவல்

உலகளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது என்று வெளிவந்துள்ள செய்தியால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு புள்ளி விபரத்தின் தகவலின்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலக அளவில் 7,21,412 ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக சீனா – 81,439, ஸ்பெயின் – 80,110, ஜெர்மனி – 62,095, பிரான்ஸ் – 40,174, ஈரான் – 38,309,பிரிட்டன் – 19, 922, சிங்கப்பூர் – 844, பாகிஸ்தான் – 1,597, இலங்கை – 117 என அந்த புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது

அதேபோல் உலகளவில் கொரோனா உயிரிழப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது என்றும், உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,956 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்த புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

Leave a Reply