shadow

dog 2 உலகின் மிக உயரமான நாய் என கின்னஸ் சாதனை படைத்திருந்த நாய் நேற்று திடீரென இறந்துவிட்டது. இதனால் அந்த நாயின் உரிமையாளர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் நகரை சேர்ந்த கெவின் டூர்லாக் மற்றும் அவரது மனைவி டெனிஸ் ஆகியோர்கள் ஆசையாக வளர்த்த வந்த நாய், உலகின் மிக உயரமான நாய் என்ற கின்னஸ் சாதனையை கடந்த 2012ஆம் ஆண்டு பெற்றது. இந்த நாய் தனது இரண்டு கால்களால் நின்றால் ஏழு அடி நான்கு அங்குல உயரம் இருக்கும் என்றும், இந்த நாயின் ஷோல்டர் அளவு 44இன்ச் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 70 கிலோ எடையுள்ள இந்த நாய், தினமும் 13 கிலோ எடையுள்ள உணவை சாப்பிடும் என்று கூறப்படுகிறது.

dog 3

ஜெயூஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நாய் நேற்று திடீரென இறந்துவிட்டதாக அதன் உரிமையாளர்கள் வருத்ததுடன் தெரிவித்துள்ளனர். இந்த நாய் தனது ஆறாவது பிறந்தநாளை அடுத்தவாரம் கொண்டாட உள்ள நிலையில் தங்களை விட்டு பிரிந்தது பெரும் மனக்கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

dog 1

Leave a Reply