கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக வயதான நபர் மரணம்

114 வயது வரை வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் கிரிஸ்டல் என்பவர் மரணம் அடைந்தார்.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கிர்ஸ்டல் என்பவர் கடந்த 1903-ம் ஆண்டு போலந்தில் உள்ள ஷார்நவ் என்ற நகரில் பிறந்தார். யூத மதத்தை சேர்ந்த இவர் தனது வாழ் நாளில் இரண்டு உலகப் போர்களையும் பார்த்தவர்

முதல் உலகப் போரின் போது தனது பெற்றோரை இழந்து அனாதையாக மாறிய கிரிஸ்டல், பின்னர் திருமணம் செய்து கொண்டு மனைவி, குழந்தைகளும் வாழ்ந்தார். ஆனால் சோதனை அவரை விரட்டியது.

போலந்தில் ஹாலோ காஸ்ட்டில் ஹிட்லரின் நாஜிப் படைகள் யூதர்களை கொன்று குவித்தனர். அதில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர். பின்னர் வேறு பெண்ணை திருமணம் செய்து இஸ்ரேல் வந்த அவர் வர்த்தகர் ஆனார்.

இவருக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் மூலம் பல பேரக் குழந்தைகள் மற்றும் கொள்ளு பேரக் குழந்தைகள் உள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *