shadow

இந்திய கின்னஸ் சாதனையை முறியடித்தது சீனா.

umbrellaகடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி கின்னஸ் சாதன குடை ஒன்று புனேயில் ஒரு வணிக வளாகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த குடை 17.06 மீட்டர் விட்டம், 10.97 மீட்டர் உயரத்தில் 2010ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த குடைதான் உலகின் மிகப்பெரிய குடை என்று கின்னஸ் சாதனை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியாவின் இந்த சாதனையை தற்போது சீனா முறியடித்துள்ளது. சீனாவின் ஜியாங்சி மாகாணத்தைச் சேர்ந்த ஒரு குடை தயாரிப்பு நிறுவனம், 23 மீட்டர் விட்டம், 14.4 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமான குடையை தயாரித்து சமீபத்தில் அறிமுகம் செய்தது.

சுமார் 5700 கிலோ எடையுடன் கூடிய இந்த குடை 418 சதுர மீட்டர் பரப்பளவை மறைக்கும் அளவுக்கு பிரமாண்டமாக உள்ளது. இதற்கு கின்னஸ் அமைப்பின் சீன பிரதிநிதிகள் பரிந்துரை செய்து சான்றிதழ் அளித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

இதன்மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய குடை தயாரித்த நாடு இந்தியா என்று இருந்த நிலை தற்போது சீனாவுக்கு மாறியுள்ளது.

Leave a Reply