shadow

6

ஒரு முட்டையின் விலை நான்கு அல்லது ஐந்து ரூபாய் என்று எல்லோருக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒரு முட்டையின் விலை ரூ.50கோடிக்கும் மேல் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை. இங்கிலாந்தில் உள்ள ஒரு முட்டையின் விலை ரூ.50கோடியே 30 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. காரணம் இதில் 1000 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

உலகின் மிக விலையுயர்ந்த முட்டை ஒன்று இங்கிலாந்து நாட்டில் தயாராகியுள்ளது. இந்த முட்டையின் மதிப்பு ரூ.50கோடியே 30 லட்சம் . இந்த முட்டையை 1000 வைரங்களால் செய்துள்ளனர். இந்த முட்டையை திறந்தால் உள்ளே 24 காரட் தங்கத்தினால் செய்யப்பட்ட பின்னணியுடன் அழகிய கலைவண்ணம் கொண்ட அமைதிப்புறா உள்ளது. இந்த முட்டைக்கு சொந்தக்காரர் Vashi Dominguez என்ற கோடீஸ்வரர்.

தற்போது இந்த முட்டையை இங்கிலாந்தில் உள்ள கண்காட்சியில் வைத்துள்ள இந்த முட்டையின் உரிமையாளர், இது விற்பனைக்கு அல்ல என்றும் அறிவித்துள்ளார். ஏராளமான பொதுமக்கள் இந்த அதிசய வைரமுட்டையை கண்காட்சியில் பார்த்து வருகின்றனர். இந்த வைர முட்டையின் அரிய புகைப்படங்களை இப்போது பார்ப்போம்.

6f

6e

6d

6c

6b

6a

Leave a Reply