shadow

கடலில் சிக்கிய இளைஞர்களை மீட்ட ஆளில்லா விமானம்: உலகின் முதல் நிகழ்வு

ஆளில்லா கார், ஆளில்லா விமானம் ஆகியவைகளின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் உலகில் முதல்முறையாக கடலில் சிக்கிய இளைஞர்கள் ஆளில்லா விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் என்ற கடற்கரையில் இளைஞர்கள் சிலர் நீச்சல் அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு வாலிபர்களை எதிர்பாராதவிதமாக அலை இழுத்துச் சென்றது. அவர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு வீரர்கள் உடனே கடலில் தத்தளித்து கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி ட்ரோனை அனுப்பி வைத்தார். அவர்கள் இருக்கும் இடத்தை சரியாக கண்டுபிடித்த ட்ரோன் உயிர்காக்கும் இரப்பர் பலூனை கீழே போட்டது. அதனை பிடித்து கொண்டு இருவரும் கரை வந்து சேர்ந்தனர். உலகில் முதல் முறையாக கடலில் சிக்கியவர்களை ட்ரோன் காப்பாற்றியது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply