shadow

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய டாக்டர்கள்

உலகின் முதல் ஆணுருப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி அமெரிக்க டாக்டர்கள் குழு சாதனை செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் பணியாற்றிய ஒரு அமெரிக்க வீரர் அந்நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிக்கியதால் அவரது ஆண் உறுப்பும், விதைப்பையும் முற்றிலும் சேதம் அடைந்தன. இதனால் அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாமல் போனது

இந்த நிலையில் அந்த வீரருக்கு அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஆண் உறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்து அதனை வெற்றிகரமாக நடத்தியும் முடித்துள்ளனர்.

மரணம் அடைந்த ஒருவரின் ஆண் உறுப்பு, விதைப்பை மற்றும் அடிவயிற்று சுவரின் ஒரு பகுதி ஆகியவற்றை எடுத்து, அந்த ராணுவ வீரருக்கு மருத்துவர்கள் பொருத்தி சாதனை செய்துள்ளனர்.

11 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை 14 மணி நேரத்தில் செய்து முடித்தனர். அறுவை சிகிச்சை செய்து கொண்ட அந்த ராணுவ வீரர் இன்னும் ஒருசில மாதங்களில் இல்லற வாழ்வில் ஈடுபட முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply