shadow

டெல்லி விமான நிலையத்தில் நிறுவப்படும் மகாத்மா காந்தியின் பிரமாண்டமான ராட்டை

spin600மகாத்மா காந்தி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது மூக்கு கண்ணாடியும், ராட்டையும்தான். மகாத்மாவின் அடையாளமாக கருதப்படும் ராட்டை ஒன்று தற்போது பிரமாண்டமாக அளவில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட உள்ளது. இந்த ராட்டையின் மொத்த எடை 4 டன் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாத்மா காந்தியின் ராட்டையை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த பிரமாண்ட ராட்டையை அகமதாபாத்தில் உள்ள காதி மற்றும் கிராமங்கள் ஆணைக்குழு உருவாக்கியுள்ளது. இந்த பிரமாண்ட ராட்டை உலக சுற்றுலா பயணிகள் பெருமளவில் வரும் டெல்லி விமான நிலையத்தில் நிறுவ இருப்பதால் ராட்டை உலக அளவில் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பர்யோக் சமிதி என்னும் நிறுவனம் இந்த பிரமாண்டமான ராட்டையை உருவாக்கியுள்ளது. இதற்காக 4 டன் எடையில் உயர்வகை தேக்கு மரங்களால் 26 தச்சர்களின் கடின உழைப்பால் 40 நாட்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து உழைக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ராட்டை காந்தியின் பெருமையையும் இந்தியாவின் அமைதி தன்மையை உலக நாடுகளுக்கு விளக்கும் வகையில் இந்த பிரம்மாண்ட ராட்டை விரைவில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விரைவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

Leave a Reply