எப்போது விடிவு காலம்?

கிட்டத்தட்ட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அழித்து வருகிறது. கொரோனாவால் உலகம் முழுவதும் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆயிரக்கணக்கில் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது லட்சக்கணக்கில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை உள்ளது

உலகம் முழுவதும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனாவால் உலகம் முழுவதும் 19, 24,314 பாதிக்கப்பட்டுள்ளனர்

மேலும் கொரோனாவால் உலக நாடுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,19,655 என்றும் இதில் அமெரிக்காவில் 23,640 பேர்களும், இத்தாலியில் 20,465 பேர்களும், ஸ்பெயினில் 17,756 பேர்களும் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்குள்ளாக்கி மீண்டவர்கள் எணிக்கை 4,44,836 என்பது குறிப்பிடத்தக்கது.,

Leave a Reply