shadow

உலக பல்கலைக்கழக பட்டியலில் இந்தியாவின் 31 பல்கலைக்கழகங்கள்

universityதி டைம்ஸ் ஹையர் எஜுகேசன் என்ற அமைப்பு 2016-17-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் குறித்து பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த பட்டியலில் 31 இந்திய பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், கலிபோர்னியா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் 2-வது இடத்தையும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் 3-வது இடத்தையும் பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் முதல் 400 இடங்களுக்குள் 2 இந்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே உள்ளன. பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி) 215 முதல் 300 இடங்களுக்கான பட்டியலிலும், பாம்பே ஐஐடி 351- 400 இடங்களுக்கான பட்டியலிலும் இடம்பிடித்துள்ளன. முதல் 200 இடங்களில் இந்திய பல்கலைக்க ழகங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்காசியாவிலிருந்து மொத்தம் 39 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இந்தியாவிலிருந்து அதிகபட்சம் 31 பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன. முதல் 800 இடங்களில் இந்தியாவிலிருந்து 19 பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன.

ஐஐடி டெல்லி, ஐஐடி கான்பூர், ஐஐடி மெட்ராஸ் ஆகியவை 401-500 இடங்களுக்கான பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஐஐடி காரக்பூர், ஐஐடி ரூர்கி ஆகியவை 501-600 பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிலிருந்து 14 கல்வி நிறுவனங்கள் இப்பட்டியலில் முதன்முறையாக இடம்பிடித்துள்ளன.

Leave a Reply