செல்பியில் உலக சாதனை. அமெரிக்க பாடகருக்கு குவியும் வாழ்த்துக்கள்

selfie1கடந்த சில வருடங்களாக செல்பி மோகம் உலகில் உள்ள அனைவரையும் ஆட்டுவித்து வரும் நிலையில் செல்பியில் சாதனைகளும் புதிது புதிதாக உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதற்கு முன்னர் 3 நிமிடங்களில் 119 செல்பி எடுத்ததே அதிகபட்ச உலக சாதனையாக இருந்த நிலையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த பாடகர் டோனி வால்பெர்க் என்பவர் 3 நிமிடங்களில் 122 செல்பி எடுத்து புதிய உலக சாதனை செய்துள்ளார். இவருக்கு அப்பகுதி மக்கள் ‘செல்பி மன்னன்’ என்ற பட்டம் கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவர் எடுத்த 122 செல்பிகளும் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மிகவேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *