shadow

அஜீத் நடித்த வேதாளம் படத்தின் டீசர் இன்று அதிகாலை 12 மணியளவில்
ajith
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த ‘வேதாளம்’ படத்தின் டீசர் இன்று அதிகாலை மிகச்சரியாக 12 மணிக்கு வெளிவந்து அஜீத்தின் ரசிகர்களை மகிழ்வித்தது. இந்த படத்தின் டீசர் யாரும் எதிர்பாராத வகையில் வித்தியாசமாக அதே நேரத்தில் முற்றிலும் மாறுபட்டு இருந்ததாக அஜீத் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அஜீத் ரசிகர்களின் ஆவலை 100% பூர்த்தி செய்திருப்பதாக கூறப்படும் இந்த டீசரைல் ஹீரோயின் ஸ்ருதிஹாசன் கூட இல்லாமல் முழுக்க முழுக்க அஜீத்தை மட்டுமே மையப்படுத்தப்படுத்தி வெளிவந்துள்ளது.

மேலும் டீசரின் அட்டகாசமான காட்சிகளுக்கு ஏற்ற வகையில் அனிருத்தின் பின்னணி இசையும் சூப்பராக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ‘வீரம்’ படத்தை கிராமத்து பின்னணியில் இயக்கியிருந்த சிறுத்தை சிவா, இந்த படத்தை நகரப் பின்னணியில் இயக்கியுள்ளார் என்பது இந்த டீசரின் மூலம் தெரியவந்துள்ளது.

‘யார்ரா நீ…எங்கடா இருக்க…? என்று வில்லன் கபீர்சிங் கர்ஜிப்பதும் அதற்கு அஜீத் ‘கண்ணாம்பூச்சி ரே ரே…என்று பதில் கூறுவதும் பின்னர் கபீர்சிங் ‘அவன் ஓடி ஒளியுற ஆள் இல்லை தேடி அடிக்கிற ஆளு’ என கூறுவதும் கடைசியில் அஜீத் ‘தெறிக்க விடலாமா? என்ற மாஸ் வசனத்துடன் இந்த டீசர் முடிவடைகிறது.

இந்நிலையில் ‘வேதாளம் டீசர் வெளிவந்த முதல் ஒரு மணி நேரத்தில் தனது முதல் சாதனையை பதிவு செய்துள்ளது. இதுவரை Youtube இணையதள வரலாற்றில் வீடியோ வெளியான முதல் ஒருமணி நேரத்தில் 34,000 லைக்குகள் பெற்று உலக சாதனை செய்த ஒரே வீடியோ என்ற புகைழை Taylor Shift அவர்களின்  Bad Blood என்ற வீடியோ பெற்று சாதனை படைத்திருந்தது. ஆனால் இந்த சாதனையை நேற்று வெளியான அஜீத்தின் வேதாளம் டீசர் முறியடித்துள்ளது. வேதாளம்’ டீசர் வெளியான முதல் ஒரு மணி நேரத்தில் 50,000க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வேதாளம்’ படத்தின் டீசர் வெளியாகி ஆறு மணி நேரத்தில் சுமார் 5 லட்சம் பார்வையாளை பெற்றுள்ளது. இன்னும் ஒருசில மணி நேரங்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுவிடும் என்றும், விரைவில் ‘புலி’ டிரைலர் சாதனையை ‘வேதாளம்’ டீசர் முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply