shadow

2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடி. ஐ.நா. மக்கள் தொகை பிரிவு தகவல்

populationஇந்தியா, சீனா நாடுகளில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் வரும் 2100ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும் என  ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை பிரிவு அறிவித்துள்ளது.

உலக மக்கள் தொகை குறித்து சமீபத்தில் ஆய்வு செய்த  ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை பிரிவு நேற்று தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதன்படி தற்போதுள்ள விகிதத்தில் மக்கள்தொகை உயர்ந்து கொண்டே இருக்குமானால் வரும் . 2050-ம் ஆண்டு 970 கோடியாகவும், 2100-ம் ஆண்டு 1,120 கோடியாகவும் உலக மக்கள் தொகை இருக்கும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. மக்கள் தொகை பிரிவு இயக்குனர் ஜான் R. வில்மோத், சியாட் நகரில் நடைபெற்ற மக்கள் தொகையியல் முன்னறிவிப்பு கூட்டத்தில் பேசியவதாது:

தற்போது உலக மக்கள் தொகை 730 கோடியாக உள்ளது. இது, 2050-ம் ஆண்டு 970 கோடியாகவும், 2100-ம் ஆண்டு 1,120 கோடியாகவும் உயரும். ஆசியாவின் தற்போதைய மக்கள் தொகை 440 கோடி. இது 2050-ல் 530 கோடியாக இருக்கும். அதே சமயம் 2100-ல் 490 கோடியாகக் குறையும். அதிக இளைஞர்களையும் குறைந்த பிறப்பு வீதத்தையும் கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகள் இந்த நூற்றாண்டு இறுதியில் மக்கள் தொகை மூப்பை கணிசமான அளவு எதிர்கொள்ள நேரிடும்.

இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள், மூத்த குடிமக்களின் எதிர்கால பாதுகாப்பு, ஓய்வூதியம், சுகாதாரம் போன்ற துறைகளில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். மக்கள் தொகை வளர்ச்சி வீதம் இந்த நூற்றாண்டின் இறுதியில் 23 சதவீதமாக இருக்கும். ஆப்பிரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த பிறப்பு வீதம் குறைந்துள்ளது. ஆனால், ஆசியா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் 1970களில் நிகழ்ந்த குறைந்த பிறப்பு வீதத்தோடு ஒப்பிடுகையில் இது நான்கில் ஒரு பங்குதான்.

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மக்கள் தொகை வளர்ச்சி முடிவுக்கு வராது. ஆப்பிரிக்க சஹாரா துணைக்கண்ட பகுதியில் இன்னும் அதிவேக மக்கள் தொகைப் பெருக்கம் உள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிறப்பு வீதம் குறைந்தாலொழிய மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறையாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply