shadow

  world oldest coupleஇங்கிலாந்து நாட்டு தம்பதிகள் உலகின் மிக வயதான தம்பதிகள் என தங்களை அறிவிக்க வேண்டும் என கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளனர். இவர்கள் இருவருடைய கூட்டு வயது 211 என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள மேற்கு யார்க்ஷையர் என்ற பகுதியை சேர்ந்த கரம்சந்த் என்பவருக்கு வயது 109. அவருடைய மனைவி கட்டாரியின் வயது 102. இவர்கள் இருவருடைய வயதின் கூட்டுத்தொகை 211. இதனால் தங்களை உலகின் மிக வயதான தம்பதிகள் என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

world oldest couple 3

கரம்சந்த்-கட்டாரி தம்பதிகளுக்கு 1925ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்கள் சுமார் 90 வருடங்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்து வாழ்ந்துள்ளனர்.  சமீபத்தில் கரம்சந்த் தனது நான்கு தலைமுறை உறவினர்களுடன் மிகவும் பிரமாண்டமாக தனது 109வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்த தம்பதிகளுக்கு 8 குழந்தைகளும், 27 பேரக்குழந்தைகளும் அவர்களுக்கு பல குழந்தைகளும் உள்ளனர்.

world oldest couple 1

Leave a Reply