shadow

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதட்டம். உலக தலைவர்கள் கவலை

UN General Secretary Ban Ki-moon today is Pakistanகடந்த இரண்டு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய ராணுவம் அதிரடியாக தாக்கியதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், இரண்டு பாகிஸ்தான் ராணுவர்கள் காயம் அடைந்ததாகவும் கூறப்படும் நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதனால் உலகத்தலைவர்கள் கவலை கொண்டுள்ளனர்.

இதுகுறித்து உலக தலைவர்கள் கூறியுள்ளதை தற்போது பார்ப்போம்.

ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி-மூன்: இந்திய, பாகிஸ்தான் எல்லையில் எழுந்துள்ள பதற்றம் கவலையளிக்கிறது. எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்பட்டிருப்பது மிகவும் முக்கியமான பிரச்சினை. இந்த நேரத்தில் பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளும் பொறுமை காக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளுக்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட்: இந்திய, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த பேச்சுவார்த் தையை ஊக்குவிக்கிறோம்.

இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா நட்புறவைப் பேணி வருகிறது. இரு நாடுகளும் பதற்றத்தை தணிக்க வேண்டும். அதே நேரம் ஐ.நா.சபையில் அறிவிக்கப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமெரிக்க வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி: இந்திய, பாகிஸ்தான் நிலவரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். தெற்காசியாவில் தீவிரவாதம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தீவிரவாதத்துக்கு எல்லைகள் கிடையாது.

Leave a Reply