selfie சாதாரண குடிமகன் முதல் பிரதமர் வரை தற்போது செல்பி புகைப்படம் எடுப்பது ஒரு பேஷனாகிவிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர்களில் தற்போது செல்பியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் அதிகளவில் பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உலகிலேயே மிகப்பெரிய செல்பி புகைப்படம் ஒன்று சமீபத்தில் எடுத்து சாதனை செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய சாதனைகள் வரிசையில் இப்போது செல்ஃபி புகைப்படமும் சேர்ந்து விட்டது. பங்களாதேசத்தில் 1,151 பேர் கொண்டு மிகப் பெரிய செல்ஃபி புகைப்படம் ஒன்று சமிபத்தில் எடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய செல்ஃபி என்ற பட்டத்தை இந்த புகைப்படத்திற்கு கொடுக்க கின்னஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

selfie1
‘நோக்கியா நிறுவனத்தின் லூமியா போனில் ஃப்ரன்ட் கேமரா குவாலிட்டி சுமாராகத்தான் இருக்கும்’ என்கிற குற்றசாட்டை மறுப்பதற்காக நோக்கியாவில் இருந்து மைக்ரோசாஃப்ட்டாக மாறிய செல்போன் நிறுவனம், இந்த அதிரடி விளம்பர செல்ஃபிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நோக்கியா லூமியா 730 என்னும் மாடலில், உலகின் மிகப் பெரிய செல்ஃபி எடுக்க தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு செய்திருந்தது மைக்ரோசாஃப்ட்.

இந்த புகைப்படத்தில் பங்குகொள்ள பதிவு செய்திருந்த ஆயிரக்கணக்கானோர்களில் 1,151 பேரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு ஏரியா டு ஏரியா இலவச வைஃபை வசதி, மைக்ரோசாஃப்ட் லூமியா 730 போன்கள், சன் கிளாஸஸ், டூர் பேக்குகள் என்று பரிசுகளை வாரி இறைத்தது மைக்ரோசாஃப்ட்.

selfie2

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *