shadow

13உலககோப்பை T20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வங்கதேசம் 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் பரிதாப தோல்வி அடைந்துள்ளது.

டாஸ் வென்ற வங்கதேச அணி ஆப்கானிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர முகமது ஷாதத் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் விழுந்து கொண்டே இருந்தது. இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 72 ரன்கள் மட்டுமே எடுத்தது.

72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணி 12 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 78 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Leave a Reply