shadow

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட்: இன்று முதல் சூப்பர் 10 போட்டிகள் ஆரம்பம்
CRICKET-WT20-2016-NZL-TRAINING
உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி தொடரில் இன்றுமுதல் சூப்பர் 10 போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய முதல் போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதவுள்ளது.

இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு நாக்பூர் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இந்திய அணியில் தோனி, அஸ்வின், பூம்ரா, தவான், ஹர்பஜன்சிங், ஜடேஜா, கோஹ்லி, ஷமி, நேகி, நெஹ்ரா, பாண்ட்யா, ரஹானே, ரெய்னா, ரோஹித் சர்மா, யுவராஜ்சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல் நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், ஆண்டர்சன், போல்ட், எலியாட், குப்தில், மெக்லிநேகன், மெக்கல்லம், மில்னே, முண்ரோ, நிக்கோல்ச், ரோஞ்சி, சாண்ட்னெர், சோதி, செளதி, டெய்லர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply