shadow

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி. அரையிறுதிக்கு இந்தியா தகுதிICC World Twenty20 India 2016:  India v Australia

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி தொடரில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் முக்கிய போட்டியான இன்றைய போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. முதல் ஐந்து ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் அடித்து அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியினர்களை பின்னர் இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களும் விழுந்ததால் ரன் உயர்வு கட்டுப்படுத்தப்பட்டது.

பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி போட்டியில் இருந்து வெளியேறுகிறது.

ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா 160/6 20 ஓவர்கள்

ஃபின்ஸ் 43
மேக்ஸ்வெல் 31
காவாஜா 26

இந்தியா: 161/4 19.1 ஓவர்கள்

விரோத் கோஹ்லி 82
யுவராஜ் சிங் 21
தோனி 18

Leave a Reply