shadow

Brazil's forward Neymar (R) is chased byஉலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டம் ஒன்றில் ரஷ்யா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. இரு அணிகளும் சம பலத்துடன் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடியதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.

முதல்பாதி வரை இரு அணிகளும் ஒருகோல் கூட போடவில்லை. இரண்டாவது பாதியில் தென்கொரியா அணி முதலில் ஒரு கோல் போட்டு முன்னிலை வகித்தது. ஆனால் அதற்கு பதிலடியாக ரஷ்ய அணி சிறிது நேரத்தில் ஒரு கோல் போட்டு சமன் செய்ததால் இரு அணி வீரர்களும் வெற்றிக்கான கோலை போட பெரும் முயற்சி செய்தனர். ஆட்டம் நேரம் முடிந்த பின்னர் உபரியாக கொடுக்கப்பட்ட மூன்று நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால், ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிரேசில் அணி, மெக்சிகோ அணியுடன் மோதியது. இந்த போட்டியும் நேற்று டிராவில் முடிந்ததால் கால்பந்து ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தியதால் இரு அணிகளும் கோல்கள் எதுவும் போடவில்லை.

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி அல்ஜீரியாவை 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுத்தது.

Leave a Reply