Chennai Today News

உலகக்கோப்பை கால்பந்து: நேற்றைய நான்கு போட்டிகளின் முடிவுகள்

உலகக்கோப்பை கால்பந்து: நேற்றைய நான்கு போட்டிகளின் முடிவுகள்

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நான்கு ஆட்டங்கள் நடைபெற்றன. இதன் முடிவுகளை தற்போது பார்ப்போம்

நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பெரு அணிகள் மோதின. இந்த போட்டியில் பெரு அணி 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் டென்மார்க் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் கோல் போடாததால் 0-0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது

நேற்று நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் நைஜீரியா மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதின. இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற 4வது ஆட்டத்தில் ஐஸ்லாந்து மற்றும் குரோஷியா அணிகள் மோதின. இந்த போட்டியில் குரோஷியா அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!