shadow

உலகக்கோப்பை கால்பந்து: ரஷ்யா, குரோஷியா காலிறுதிக்கு தகுதி

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் தற்போது நாக் அவுட் சுற்றுக்கள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் உருகுவே நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் ரஷ்யா மற்றும் டென்மார்க் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. நேற்று நடந்த இரண்டு போட்டிகளும் பெனால்ட்டி ஷூட் முறையில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய முதல் போட்டியில் ரஷ்ய அணி ஸ்பெயின் அணியுடன் மோதியது. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் இருந்ததால் பெனால்டி ஷூட் முறையில் ரஷ்ய அணி 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

அதேபோல் டென்மார்க் மற்றும் குரோஷியா நாடுகளுக்கு இடையிலான போட்டியிலும் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் இருந்ததால் பெனால்டி ஷூட் முறையில் குரோஷியா அணி 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

Leave a Reply