shadow

cricketஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் அயர்லாந்தை வெற்றி பெற்று காலிறுதி வாய்ப்பை பாகிஸ்தான் அணி உறுதி செய்தது. மற்றொரு போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட் அணியை மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றதால் காலிறுதியில் இருந்து அயர்லாந்து அணி வெளியேற்றப்பட்டது.

டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அயர்லாந்து அணி 237 ரன்கள் எடுத்தது. அந்தாணியின் வில்லியம்ஸ் 107 ரன்கள் எடுத்தார். வெற்றி பெற 238 என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி46.1 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அகமது 101 ரன்களும், உமர் அக்பல் 20 ரன்களும், மிஸ்பா 39 ரன்களும் எடுத்தனர்.

மற்றொரு போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட் அணி 47.4 ஓவர்களில் 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. பின்னர் 176 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 30.3 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கார்டன் 50 ரன்களும், ராம்டின் 33 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி ரன் விகித அடிப்படையில் காலிறுதிக்கு தகுதி பெற்றது. காலிறுதிக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

Leave a Reply