இந்தியாவில் எவ்வளவு பேர்?

உலகில் 96.99 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ளது. உலக கொரோனா பாதிப்பு ஒரு கோடியை நெருங்கிவிட்டதால் உலக நாடுகள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளன.

உலகில் கொரோனாவில் இருந்து 52,51,111 குணம் அடைந்தனர் என்பதும், உலகில் கொரோனா பாதிப்புடன் 39,57,531 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 4,90,933 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் கொரோனாவால் 5,124 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் அதிகபட்சமாக 1,180 பேர்களும், மெக்ஸிகோவில் 947 பேர்களும், அமெரிக்காவில் 595 பேர்களும், இந்தியாவில் 401 பேர்களும், கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பிரேசிலில் 40,673 பேர்களுக்கும், அமெரிக்காவில் 37,907 பேர்களுக்கும், இந்தியாவில் 18,185 பேர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

Leave a Reply