உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 7வது சுற்று ஆட்டத்தில், ஆனந்த் – கார்ல்சன் இன்று மோதுகின்றனர். முதல் 4 சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்ததை அடுத்து, இரு வீரர்களும் தலா 2 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர்.இந்த நிலையில், 5வது மற்றும் 6வது சுற்று ஆட்டங்களில் அபாரமாக விளையாடிய இளம் வீரர் கார்ல்சன் வெற்றியை வசப்படுத்தி 4&2 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார். நேற்றைய ஓய்வு நாளுக்குப் பிறகு, 7வது சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. 2 புள்ளிகள் பின்தங்கியுள்ளதால், அனுபவ வீரர் ஆனந்த் கடும் நெருக்கடியுடன் களமிறங்குகிறார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *