shadow

download (5)

பிளஸ் 2 படித்த, திருமணம் ஆகாத பெண்களுக்கு, ராணுவ செவிலியர் பள்ளி மற்றும் மருத்துவமனையில், நர்சிங் படிப்புடன் பயிற்சி பெற்று ராணுவ மருத்துவப் பிரிவில் பணிபுரிவதற்கு ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது இந்திய ராணுவம்.

பாடப் பிரிவுகள்: பி.எஸ்சி., நர்சிங் (4 ஆண்டுகள்) மற்றும் டிப்ளமோ இன் ஜெனரல் நர்சிங் அன்ட் மிட்ஒய்ப்ரி (3 ஆண்டுகள்)

வயது வரம்பு: ஆகஸ்ட் 1, 1991ல் இருந்து ஜூலை 31, 1999க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளில் 50 சதவீதத்துடன் தேர்ச்சி. பிளஸ் 2 தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். திறந்தநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் இப்படிப்புக்கு தகுதியானவர்கள் இல்லை.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள், செவிலியர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு: ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் பொது நுண்ணறிவு போன்ற பகுதிகளில் ’அப்ஜெக்டிவ்’ அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 30

மேலும் விவரங்களுக்கு: www.indianarmy.gov.in

 

Leave a Reply