shadow

மகளிர் உலகக்கோப்பை ஃபைனல்: இன்று ஒரே நாளில் மூன்று கொண்டாட்டம்

மகளிருக்கான உலக கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டம் இன்று இந்திய மகளிர் அணி மற்றும்ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கும் இடையே நடைபெற உள்ளது

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய நாள் இந்திய அணியை பொறுத்தவரை ஒரு விசேஷமான நாளாகும். இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். மேலும் இன்று இந்திய அணி முதல் முதலாக இறுதிப் போட்டியை சந்திக்கும் நாள். அது மட்டுமின்றி இன்று மகளிர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று பிறந்தநாளை கொண்டாடும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் மகளிர் தினத்தன்று மகளிருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை வென்றால் மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என கருதப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *