shadow

பெயர் குழப்பத்தால் சில நிமிடங்கள் கோடீஸ்வரியாக இருந்த அமெரிக்க பெண்

பெயரில் ஏற்பட்ட குழப்பத்தால் இன்னொரு பெண்ணின் கணக்கிற்கு செல்ல வேண்டிய சுமார் ரூ.7.5 கோடி ரூபாய் அமெரிக்க பெண் ஒருவரின் வங்கி கணக்கில் சில நிமிடங்கள் இருந்ததாகவும், அதன் பின்னர் வங்கி நிர்வாகம் தவறை புரிந்து கொண்டு மீண்டும் அந்த பணத்தை எடுத்துவிட்டதால் சில நிமிடங்கள் கோடீஸ்வரியாக அந்த பெண் இருந்துள்ளார்

அமெரிக்காவின் பாஸ்டன் மாகாணத்தை சேர்ந்த எல்லென் பிளம்மிங் என்ற பெண் தனியார் நிதி நிறுவனத்தில் கணக்கு வைத்துள்ளார். வெறும் 3400 ரூபாய் இருந்த தனது கணக்கை சமீபத்தில் எல்லன் பரிசோதிக்கும் போது ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.

3400 ரூபாய்க்கு பதிலாக சுமார் 7.5 கோடி ரூபாய் அவரது கணக்கில் இருந்துள்ளது. உடனே, தனது வேலையை விட முடிவு செய்த எல்லென், தனது குழந்தைகளின் கல்வி கடனை அடைத்து விடலாம் என கனவுலகில் வாழத் தொடங்கியுள்ளார். எனினும், சந்தேகம் ஏற்பட்டு நிதி நிறுவனத்தை அவர் தொடர்பு கொண்ட போது கனவு கலைந்து சோகம் வந்து குடியேறியது.

புளோரிடாவில் எல்லென் பெயரில் வசிக்கும் மற்றொரு பெண்ணுக்கு செல்ல வேண்டிய தொகையை தவறுதலாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளித்த நிறுவனம், 7.5 கோடியையும் திரும்ப பெற்றுக்கொண்டது. சோகத்தில் இருந்தாலும், இறந்த பின்னர் சில நிமிட கோடீஸ்வரி என என்னை யாரேனும் குறிப்பிடுவார்கள் என எல்லென் கூறியுள்ளார்.

Leave a Reply