shadow

உலகிலேயே ஹெலிகாப்டரில் பிறந்த முதல் குழந்தை. வெள்ள சோகத்திலும் ஒரு சாதனை

அமேசான் காடுகளுக்கு பிரபலமான தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் அடிக்கடி கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து வருகின்றது. இந்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அந்நாட்டு அரசு இடம் மாற்றி வருகிறது.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் வெள்ளத்தில் சிக்கிகொண்டார். அந்த நேரத்தில் அவருக்கு பிரசவ வலியும் ஏற்பட்டதால் அப்பெண்ணை எப்படி மீட்பது என்று புரியாமல் மீட்புப்படையினர் தவித்து வந்தனர். பின்னர் ஒருவழியாக ஹெலிகாப்டரில் வந்த மீட்புக்குழுவினர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வானில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோதே அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துவிட்டது. இதுவரை பேருந்து, ரயில் ஏன் விமானத்தில் கூட குழந்தை பிறந்துள்லது. ஆனால் அனேகமாக ஹெலிகாப்டரில் பிறந்த முதல் குழந்தை இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply