shadow

முதல்வருக்கு முத்தம் கொடுத்த பெண் கவுன்சிலர். கர்நாடகாவில் பரபரப்பு

kissகர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பெண் கவுன்சிலர் ஒருவர் பொது மேடையொன்றில் முத்தம் கொடுத்த விவகாரம் கன்னட தொலைக்காட்சிகளில் திரும்ப திரும்ப ஒளிபரப்பப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே சித்தராமையாவின் மீது  சீனிவாச பிரசாத், அம்பரீஷ் உள்பட ஒருசில காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஒருசிலர் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த முத்தச்சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக குருபர சங்கம் சார்பில் மாவட்ட, தாலுக்கா பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பாராட்டு விழா ஒன்று நேற்று பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டு விருதுகள் வழங்கியபோது மேடையில் இருந்த தரிகெரே தாலுகா பஞ்சாயத்து உறுப்பினர் கிரிஜா சீனிவாஸ் என்ற பெண் சித்தராமையாவின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக சித்தராமையாவை கட்டி அணைத்து கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார். அந்த முத்தத்தை சித்தராமையா புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார்.

கர்நாடக செய்தி நிறுவனங்கள் இந்த முத்த விஷயத்தை பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்ட நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த முதல்வர் ”எனக்கு முத்தம் கொடுத்த பெண் என் மகளுக்கு சமமானவர். இதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம்” என்று கூறினார். முத்தம் கொடுத்த பெண் கிரிஜா சீனிவாஸ் செய்தியாளர்களிடம் கூறியபோது ”நான் மைசூர் மாவட்டம் வருணா தொகுதியை (சித்தராமையாவின் தொகுதி) சேர்ந்தவள். முதல்வர் சித்தராமையாவை நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நீண்ட நாளாக இருந்தது. அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த மகிழ்ச்சியில் சித்தராமையாவின் கன்னத்தில் முத்தமிட்டேன். நானும் எனது குடும்பத்தினரும், சித்தராமையாவை அப்பா என்றுதான் அழைப்போம். நான் முன்கூட்டியே திட்டமிட்டு முத்தம் கொடுக்கவில்லை” என்று கூ சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Leave a Reply