Chennai Today News

துருக்கியில் சட்டவிரோதமாக குடியேற சூட்கேசுக்குள் மறைந்திருந்த பெண்

துருக்கியில் சட்டவிரோதமாக குடியேற சூட்கேசுக்குள் மறைந்திருந்த பெண்

துருக்கி நாட்டில் குடியேற சூட்கேஸில் மறைந்து துருக்கியில் நுழைய முயன்ற இளம் பெண் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 27 வயதான இளம் பெண் ஒருவர் துருக்கியில் குடியேற முடிவு செய்தார். இந்த நிலையில் தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக துருக்கி நாட்டு எல்லை வரை சென்ற அந்தப் பெண் பின்னர் சிறிய சூட்கேஸில் உடலைக் குறுக்கி படுத்துக் கொண்டார்.

பின்னர் பெண்ணின் நண்பர்கள் துருக்கிக்குச் சென்றனர். ஆனால் எல்லையோரப் படையினர் நடத்திய சோதனையில் சூட்கேஸின் உள்ளே பெண் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!