shadow

phoneரஷ்யாவில் உள்ள இளம்பெண் ஒருவர் குளித்துக்கொண்டே செல்போனில் பேசியபோது மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை சேர்ந்த எவ்ஜெனிய என்ற 24 வயது இளம்பெண், சமீபத்தில் பாத்ரூமில் தனது மொபைல்போனை சார்ஜில் போட்டுவிட்டு குளித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு போன் அழைப்பு ஒன்று வந்ததால் சார்ஜில் உள்ள போனை எடுத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்போன் அவருடைய கையில் இருந்து நழுவி அவர் குளித்துக்கொண்டிருக்கும் பாத் டேப்பில் விழுந்தது.,

இதனால் அவருடைய உடலில் மின்சாரம் பாய்ந்து மூர்ச்சைக்குள்ளானார். பின்னர் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால சிகிச்சைக்கு பலனின்றி அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

குளித்துக்கொண்டிருக்கும்போது, தண்ணீரில் இருக்கும்போதோ சார்ஜில் உள்ள செல்போனில் பேசவேண்டாம் என செல்போன் நிறுவனங்கள் அறிவுறுத்தியிருந்தும் இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாமல் ஏராளமான பேர் உள்ளனர் என்பதை இந்த துயர சம்பவம் நிரூபித்துள்ளது.

Leave a Reply