shadow

இறந்து விடுவாய் என ஜோதிடம் கூறிய ஜோதிட நிலையத்தை இடித்து தரை மட்டமாக்கிய பெண்

சீனாவில் சிசுவான் மாகாணம் மியான்யங் பகுதியை சேர்ந்த 70 வயது பெண் வாங். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அங்குள்ள ஜோதிடர் ஒருவரை சந்தித்தார். அப்போது வாங் 2018-ம் ஆண்டை பார்க்கமாட்டார் என்றும் அதற்குள் இறந்து விடுவார் என்றும் ஜோதிடம் கூறினார். அதை உண்மை நம்பிய அவர். ஒவ்வொரு நாளையும் மரண பயத்துடன் கழித்து வந்தார்.

இந்த நிலையில் அவரது நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருந்தது. 2018ம் பிறந்தது. அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. எனவே கடந்த வாரம் ஜோதிடர் நிலையத்துக்கு வாங் மீண்டும் சென்றார்.

ஜோதிடரை சந்தித்து அவர் ஆரூடம் பொய் என வாக்குவாதம் செய்தார். மேலும் ஆத்திரத்தில் ஜோதிட நிலையத்தை இடித்து தரை மட்டமாக்கினார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

தவறாக ஆரூடம் சொல்லி வாங் மனதை நோகடித்ததற்காக அவரிடம் ஜோதிடரை மன்னிப்பு கேட்க வைத்தனர். சீனாவில் ஜோதிடம் பிரசித்தி பெற்ற கலையாக திகழ்கிறது. ஒருவரின் பெயர், பிறந்த தேதி, நேரம், முக அடையாளம், உள்ளங் கைகளை பார்த்து ஜோதிடம் சொல்வதில் வல்லவர்களாக திகழ்கின்றனர்.

Leave a Reply