shadow

நேற்று முன் தினம் 11ஆம் தேதி 11வது மாதம் 111வது பிறந்த நாளை ஒரு பெண் கொண்டாடியுள்ளார். மிக அபூர்வமாக வந்துள்ள பிறந்தநாளை கொண்டாடிய அந்த முதிய பெண்ணுக்கு உறவினர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த  ரோசா பெக்னர் என்ற பெண் நவம்பர் மாதம் 11ஆம்தேதி பிறந்தார். இந்த வருடம் அவருக்கு 111வது பிறந்தநாள். 11வது மாதம் 11ஆம் தேதியில் 111வது பிறந்த நாளை கொண்டாடிய அவர் இதற்கு முன்பு இதேபோல தனது 11வது பிறந்தநாளை கொண்டாடியதை நினைவு கூர்ந்தார்.

அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா நகரில் பிறந்த அவர் உலகிலேயே மிக வயதான வாழும் மனிதர்களில் 3வது இடத்தில் உள்ளார்.

111 birthday 1

Leave a Reply