மாஸ்கோவில் மெட்ரோ ரயிலை ஒட்டிக்கொண்டிருந்த ஓட்டுனர் திடீரென வெளியே விழுந்து இறந்ததால், அந்த ரயில் ஓட்டுனரே இல்லாமல் பயணிகளோடு ரயில் நிலையத்தை அடைந்த சம்பவம் நடந்துள்ளது.

தெற்கு மாஸ்கோ நகரில் இருந்து ரியாசன்ஸ்கி புராஸ்பெக்ட் ரயில் நிலையம் நோக்கி அதிவேக மெட்ரோ ரயில் ஒன்று புறப்பட்டது. அதிவேகமாக பல பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த அந்த ரயிலில் ஓட்டுனரே இல்லை.

அந்த இடத்திற்கு சிறிது தூரம் முன், தெரியாமல் ரயிலின் கதவை திறந்த ஓட்டுனர், அதனை மூட முயற்சித்தப்போது அடிபட்டு தண்டவாளத்தில் விழுந்து பலியானார்.

இதுதொடர்பாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து ஓட்டுனர் இல்லாமல் சென்ற ரயில் ‘ஆட்டோமேட்டிக் பிரேக் சிஸ்டம்’ மூலம் ரியான்ஸ்கி புராஸ்பெக்ட் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

மிக பெரிய விபத்திலிருந்து ரயிலை காப்பாற்றிய ரயில்வே அதிகாரிகள் ரயிலின் ஓட்டுனர் எதற்காக கதவை திறந்தார் என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply