போலீசிடம் எதிர்கேள்வி கேட்ட எம்.எல்.ஏ

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் ஒருசிலர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் போலீசார் செக் போஸ்ட்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் எம்எல்ஏ சஞ்சய் குமார் திவாரி என்பவரின் காரில் மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்த போது என்னுடைய காரில் நேற்று வரை பொது மக்களுக்கு அரிசி பருப்பு போன்ற மளிகை பொருட்களை சப்ளை செய்து கொண்டிருந்தோம். இந்த காரில் எப்படி மதுபாட்டில்கள் வந்தது என்றே எனக்கு தெரியாது. நீங்கள் தான் அதை கண்டுபிடிக்க வேண்டும்

என்னுடைய காரில் மதுபாட்டில்கள் இருப்பதை கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது, இதுகுறித்து விசாரணை நடத்துங்கள் என்று எம்எல்ஏ கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

இதுகுறித்து போலீசார் கூறுகையில் எம்எல்ஏ காரில் மதுபானம் வைத்து கடத்தியதில் நான்கு பேருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்

எம்எல்ஏவின் காரை தவறாக அந்த நான்கு பேர் பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply