shadow

maggiகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவில் ரசாயன பொருட்கள் கலந்துள்ளதால் உத்தரபிரதேசம் உள்பட மூன்று மாநிலங்கள் மேகி நூடுல்ஸுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசும் மேகி நூடுல்ஸ் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.

அதன்படி 32 மாவட்டங்களிலும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுக்களை மாதிரிகளாக உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சேகரித்து சென்னை, கோவை, சேலம், தஞ்சை, நெல்லை, மதுரை ஆகிய 6 இடங்களில் உள்ள உணவுப் பாதுகாப்பு ஆய்வு பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பியுள்ளனர். இங்கு நடைபெறும் பரிசோதனைக்கு பின்னர் மேகி நூடுல்ஸ்ஸுக்கு தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என தெரிகிறது.

தமிழகத்தில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை வருமா, இல்லையா என்பது இன்று அல்லது நாளைக்குள் தெரிந்து விடும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கைகளினால் தமிழ்நாட்டில் மேகி நூடுல்ஸ் விற்பனையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று நெஸ்லே நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்களில் வழக்கம் போல மேகி நூடுல்ஸ் விற்பனை நடந்தது என்று தெரிய வந்துள்ளது.

மேகி நூடுல்சில் சுவையை அதிகரிக்க செய்ய எம்.எஸ்.ஜி என்று கூறப்படும் “மோனோ சோடியம் குளுட்டாமேட்” என்ற ரசாயனப் பொருள் சேர்க்கப்படுவதாகவும், இதில் ஈயம் அதிகம் உள்ளதால் உடலில் பல நோய்களை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leave a Reply