10abvபிரபல ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித் அவர்களின் 13 வயது மகளும் பிரபல குழந்தை நட்சத்திரம் மற்றும் பாடகியுமான வில்லோ ஸ்மித்தின் சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்று இன்று இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பு வெள்ளையில் வெளியாகியுள்ள இந்த புகைப்படத்தில் வில்ஸ்மித்தின் 13 வயது மகள் பிரபல நடிகர் மொய்செஸ் அரியாஸ் என்ற நடிகரின் படுக்கையறையில் இருக்கிறார். வில்லோ ஸ்மித் படுக்கையில் தூங்கிக்கொண்டிருப்பது போலவும், மொய்செஸ் படுக்கையில் மேலாடையின்றி உட்கார்ந்திருப்பது போன்றும் வெளியாகியுள்ள இந்த புகைபடத்தால் சமூக வலைத்தளங்கள் பரபரப்பு ஆகியுள்ளது.

இந்த புகைப்படம் வெளியானதை அடுத்து வில்லோ ஸ்மித்தின் தந்தை வில்ஸ்மித் அதிர்ச்சியடைந்ததாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இருப்பினும் தனது மகள் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், அவள் ஒருபோதும் தவறான வழிக்கு செல்லமாட்டாள் என்று தான் நம்புவதாக கூறியுள்ளார். ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களில் இந்த புகைப்படம் படுவேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *