shadow

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு நீக்கமா?
simbu
பீப் பாடல் விவகாரத்தில் சிக்கியுள்ள சிம்புவுக்கு ராதிகா, சரத்குமார் போன்ற ஒருசிலரை தவிர வேறு யாருமே ஆதரவு தெரிவிக்காத நிலையில் நேற்று நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில்  நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணான் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் சிம்பு விவகாரம் குறித்து கூறியபோது, “பீப் பாடல் விவகாரத்தில் மன்னிப்பு கோருமாறு, சிம்புவிடம் அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் சிம்பு தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும், இந்த பிரச்சனையை சிம்பு சட்டப்படி சந்திப்பார் என்று கூறியதாக நிர்வாகிகள் கூறினர். மேலும்

சிம்பு  விவகாரத்தில் சரத்குமாரும், ராதிகாவும் முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாக குறிப்பிட்ட நிர்வாகிகள், இப்பிரச்னையில்  வேண்டுமென்றெ நடிகர் சங்கத்தை சிக்க வைக்க முயற்சிப்பதாகவும் புகார் கூறினர். நடிகர் சிம்பு‬ விவகாரத்தில் நடிகர் சங்கம் ஏமாற்றியதாக நடிகை ராதிகா தெரிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் சிம்பு மன்னிப்புக்கோரி இருந்தால், பிரச்னையை நடிகர் சங்கம் கையில் எடுத்திருக்கும் என்றும், இந்த விவகாரத்தில் சங்கத்திலிருந்து நடிகர் சிம்புவை நீக்கும் எண்ணமில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அதேபோல்,  சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் சரியாக கணக்குகள் தாக்கல் செய்ய வில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர்கள், கணக்குகள் ஒப்படைக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விரைவில் சங்க கட்டடவேலைகள் தொடங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.

Leave a Reply