shadow

மீண்டும் இணைகின்றனர் விஜய்-ஷங்கர்.
vijay2
இளையதளபதி விஜய், இலியானா நடிப்பில் ஷங்கர் இயக்கிய திரைப்படம் ‘நண்பன்’. இந்த திரைப்படத்தில் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர்களும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் ஆகியது. பாலிவுட்டில் அமீர்கான், மாதவன், கரீனா கபூர் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘3 இடியட்ஸ்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த நண்பன்’ படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அதன் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கவுள்ளதாகவும், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்திலும் அமீர்கான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகமும் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ‘2.0’ படத்தை முடித்தவுடன் ஷங்கர், ‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்றும் இந்த இரண்டாம் பாகத்திலும் விஜய் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply