shadow

thala 56அஜீத் நடித்த என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜீத் இந்த படத்தில் டாக்சி டிரைவராக நடிக்கின்றாராம். அவருடைய தங்கையாக நடிக்கும் லட்சுமி மேனன் எம்.பி.பி.எஸ் மாணவியாக நடித்து வருகிறாராம். கொல்கத்தாவில் இந்த கதை நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த படம் ரஜினி நடித்த ‘பாட்ஷா’ படத்தின் ரீமேக் என்று செய்தி வெளியாகியுள்ளது. பாட்ஷாவில் மும்பை, ஆட்டோ டிரைவர், தங்கையின் டாக்டர் கனவு ஆகியவை இந்த படத்தில் கொல்கத்தா, டாக்சி டிரைவர், தங்கை டாக்டர் என ஒரே மாதிரி வருவதால் இது உறுதியாக பாட்ஷா ரீமேக்தான் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஞ்சித் இயக்கவிருக்கும் ரஜினியின் படமும் ஒரு கேங்ஸ்டார் படம் என்றும், அந்த படத்தின் கதையும் பாட்ஷா டைப்பில் செல்வதாகவும் கூறப்படுகிறது. எனவே ரஜினி தரப்பில் இருந்து அஜீத் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply