shadow

உலகக்கோப்பை டி-20 போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகலா?
pakistan
ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக ஒவ்வொரு நாடும் தங்கள் அணி வீரர்களை அறிவித்து வரும் நிலையில் திடீரென பாகிஸ்தான் இந்த போட்டி தொடரில் இருந்து விலகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் நடைபெறும் போட்டி என்பதால் பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அனுப்புவது குறித்து இன்னும் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுமதி வரவில்லை என்றும் இந்தியாவில் உள்ள நிலைமையை பிரதமர் அலுவலகம் மீளாய்வு செய்து வருவதாகவும், பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்த பின்னரே பாகிஸ்தான் இந்த போட்டியில் விளையாடுவது உறுதி செய்யப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகார்யார் கான் தெரிவித்துள்லார்.

பாதுகாப்பு காரணங்களால் இந்தியாவில் நடைபெறும் டி-20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கும் ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் வாரியம் கடந்த சில வாரங்களுக்கு முன் ஐசிசிக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் இந்த கோரிக்கையை ஐசிசி ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாகிஸ்தான் ஒருவேளை இந்த போட்டியில் பங்கேற்காவிட்டால் அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு ஐசிசி அபராதம் விதிக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply