shadow
நிர்மலா சீதாராமன் மதுரையில் போட்டியா? பாஜகவின் தேர்தல் வியூகம்
தமிழகத்தில் இன்னும் நோட்டாவை கூட தாண்ட முடியாத நிலையில் உள்ள பாஜக, வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்துள்ளதாம்
மதுரை, கோவை, கன்னியாகுமரி, திருச்சி, சேலம், ராமநாதபுரம், தென் சென்னை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடவுள்ளதாகவும், இந்த எட்டு தொகுதிகளிலும் பாஜகவின் நிர்மலா சீதாராமன், பொன்ராதாகிருஷ்ணன், இல கணேசன், சுப்பிரமணியன் சுவாமி போன்ற பிரபலங்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மதுரையில் நிர்மலா தேவி போட்டியிட வசதியாகத்தான் அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும், இதேபோல் மற்ற ஏழு தொகுதிகளிலும் விரைவில் நலத்திட்ட அறிவிப்புகள் வெளிவரும் என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply