shadow

காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் குஷ்புவா?

kushbooதமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுக, பாமக, மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக ஆகிய கட்சிகள் முதலமைச்சர்
வேட்பாளரை அறிவித்துவிட்டு சுறுசுறுப்பாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை  என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திமுகவுடன் கூட்டணி என நம்பிக்கையுடன் காங்கிரஸ்  இருந்த நிலையில் தற்போது திமுக, பாஜகவிடம் நெருங்கி வருவதால் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் தனித்து விடப்பட்டதாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நிலவரம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்த புதுடெல்லி சென்றிருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சென்னை திரும்பினார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘வரவிருக்கின்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிர பிரசாரம் செய்வேன்’ என்று கூறினார்.

வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இளங்கோவன் அதுகுறித்துகட்சியின் டெல்லி தலைமை முடிவு செய்யும் என்று கூறினார். இந்நிலையில் இந்த தேர்தலில் நடிகை குஷ்பு போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும், அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவும் காங்கிரஸ் முயன்று வருவதாகவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

Leave a Reply