shadow

Iபிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஐ’ திரைப்படம் முதலில் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அஜீத்தின் என்னை அறிந்தால் படக்குழுவினர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி ஜனவரி 9ஆம் தேதி ரிலீசாகும் என கூறப்பட்டது. இதனால் அஜீத் படத்திற்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்கள் ‘ஐ’ படத்திற்காக ஆறுநாட்களுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திடீரென ‘ஐ’ படமும் ஜனவரி 14ஆம் தேதிதான் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘ஐ’ படத்திற்கு யூ சர்டிபிகேட் கிடைக்காததால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பவுள்ளதாக படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ரிவைசிங் கமிட்டிக்கு சென்றால் மீண்டும் சென்சார் ஆகி வருவதற்கு காலதாமதம் ஆகலாம் என தெரிகிறது. இதனால் படம் திட்டமிட்டபடி பொங்கல் தினத்தில் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே ஐ படத்திற்காக ஒதுக்கப்பட்ட தியேட்டர்கள் மீண்டும் தற்போது என்னை அறிந்தால் படத்திற்காக அவசர அவசரமாக மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஷாலின் ஆம்பள, கார்த்தியின் கொம்பன் ஆகிய படங்களுக்கும் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் இருக்காது என்று கூறப்படுகிறது.

யூ/ஏ சர்டிபிகேட் காரணமாக தமிழக அரசின் வரிச்சலுகை கிடைக்காது என்றும் அதனால் பலகோடி தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படும் என்ற காரணத்தினால்தான் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply