shadow

தேமுதிகவை இழுக்க மும்முனை போட்டி

vijayakanthதமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. திமுக-காங்கிரஸ் தற்போது உறுதியாகிவிட்ட நிலையில் இந்த கூட்டணியில் அடுத்ததாக தேமுதிகவை இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் மும்முனை போட்டி, நான்குமுனை போட்டி என்றுதான் பார்த்துள்ளோம். ஆனால் முதல்முறையாக ஒரு கட்சியை தங்கள் பக்கம் இழுக்க மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதலில் வெற்றி பெற்றால்ல்தான் அடுத்து தேர்தலில் வெற்றி பெறமுடியும் என அக்கட்சிகள் கருதுகின்றன

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடனும், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடனும் கூட்டணி வைத்த தே.மு.தி.க. இந்த முறை எந்த அணியில் சேரும் என்பதே திமுக, அதிமுக, பாஜக கூட்டணியின் எதிர்பார்ப்பாக உள்ளது. தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க.வும், பா.ஜனதாவும், மக்கள் நலக்கூட்டணியும் மும்முனை போட்டி நடத்தி வருகின்றன.

நேற்று தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘விஜயகாந்துக்கு மீண்டும் அழைப்பு விடுத்ததுடன் விஜயகாந்த் நல்ல முடிவு எடுக்க வேண்டும்’’ என்றும் கேட்டுக் கொண்டார். அதேபோல் தேமுதிக தங்கள் கூட்டணியில்தான் இருப்பதாக் இன்னும் பாஜக சொல்லிக்கொண்டிருக்கின்றது. மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்களும் அவ்வப்போது விஜயகாந்தை நேரில் சந்தித்து மக்கள் நலக்கூட்டணியில் சேர வலியுறுத்தி வருகின்றனர்.

விஜயகாந்த் தி.மு.க. கூட்டணியில் சேரும் மன நிலையில்தான் இருக்கிறார். ஆனால் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு பதில் பா.ஜனதாவை இடம் பெறச் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை ரகசிய தூதர்களிடம் சொல்லி வந்தார்.

இந்த நிலையில் வருகிற 20ஆம் தேதி நடைபெறும் காஞ்சீபுரம் மாநாட்டில் தே.மு.தி.க.வின் நிலை தெரிய வரும் என தேமுதிக வட்டாரங்கள் கூறினாலும் அந்த மாநாட்டிலும் விஜய்காந்த் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பையும் அறிவிக்க மாட்டார் என்றும் கடைசி வரை தன்னை நாடி வரும் கட்சிகளை இழுத்தடிப்பார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

Leave a Reply