வேறு சிறைக்கு மாற்றப்படுகிறாரா சசிகலா?

சொத்த குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக சிறைத்துறை அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளா் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு தனி சமையலறை, சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா புகார் கூறியிருந்தாா். இது, தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம் உள்பட இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் இரு குழுக்களாக பிாிந்துள்ளனர். அதன்படி ஒரு குழுவினர் டி.ஐ.ஜி. ரூபாவுக்கும் மற்றொரு குழுவினர் டிஜிபி சத்யநாராயண ராவுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றனர். இது கைதிகளுக்குள் கோஷ்டி மோதலாக உருவாக வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக 32 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு நேற்று மாற்றப்பட்டனர்.

சசிகலாவுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் அவரையும் வேறு சிறைக்கு மாற்ற கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு மாற்றப்படுவாறெனில் அவர் தும்கூா் சிறைக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *