shadow

ஜெயலலிதா வீட்டில் சிபிஐ சோதனை நடத்துமா? விஜயகாந்த் கேள்வி
vijayakanth
கடந்த சில நாட்களாக தேமுதிகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் சிபிஐ சோதனை நடத்த வேண்டும் என விஜயகாந்த் கோரிக்கை எழுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முழு அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி கடந்த சில நாட்களாக தேமுதிக போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில்  தே.மு.தி.க. சார்பில் மஞ்சக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த் ”ஏற்கனவே, கடலூர் மாவட்டத்தில் சுனாமி மற்றும் தானே புயல் தாக்கியிருக்கிறது. அப்போதெல்லாம் ஜெயலலிதா வந்து பார்த்தாரா?

வீராணம் மற்றும் பெருமாள் ஏரியை தூர் வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதி முறையாக செலவிடப்படவில்லை. அவற்றை முறையாக செயல்படுத்தியிருந்தால் இப்போது வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

அதேபோல், தமிழக வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி என்னவாயிற்று? கடலூர் மக்களுக்கு சாப்பாடு போட்டதற்கே ரூ.40 கோடி செலவாகி விட்டது என மாவட்ட கலெக்டர் கணக்கு காட்டுகிறார். இவர் ஜெயலலிதாவை விஞ்சிவிட்டாரா எனத் தெரியவில்லை.

தமிழகத்தில் ஆட்சி செய்பவர்களுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. பணத்தாசையும், பதவி ஆசையும் தான் உள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது போல், ஜெயலலிதா முதல் அனைத்து அமைச்சர்கள், கவுன்சிலர்கள் வீடுகள் வரை அனைவரிடத்திலும் சோதனை செய்ய சி.பி.ஐ. முன்வருமா?

எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவன் நான். அவ்வாறு பேசினால், என்னை உளறுகிறேன் எனக் கூறுகின்றனர். மற்றவர்கள் பேசுவதைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடியவன் நான் இல்லை” என்றார்.

Chennai Today News: Will CBI raid to Jayalalitha house? Vijayakanth

Leave a Reply