பல்கேரியாவில் அஜித்-விஜய் சந்திக்க வாய்ப்பா?

தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ‘தளபதி 61’ படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஐரோப்பாவுக்கு செல்கின்றனர்.

‘தளபதி 61’ படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவின் பல நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் பல்கேரியாவிலும் ஒருசில காட்சிகளை படமாக்க இயக்குனர் அட்லி திட்டமிட்டுள்ளாராம். அந்த வகையில் பல்கேரியாவில் அஜித்-விஜய் சந்திக்க ஒரு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித், விஜய் ஆகிய இருவருமே தொழிலில் போட்டியாளர்களாக இருந்தாலும் நிஜத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது இருவருக்கும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *